Saturday 8 October 2016

பனீர் கம்பு மாவு லட்டு

பனீர் கம்பு மாவு லட்டு

பனீர் கம்பு மாவு லட்டு

 

தேவையானவை: கம்புமாவு 9 டேபிள்ஸ்பூன், உதிர்த்த‌ பனீர்  ஒரு கப், துருவிய கருப்பட்டி  ஒரு கப், ஏலக்காய்ப்பொடி  ஒரு டீஸ்பூன், தண்ணீர்  கால் கப், நெய்  சிறிது

 

செய்முறை: கம்புமாவைக் குறைந்த தீயில் வாசனை வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும். பனீரை மிக்ஸியில் மைய அரைத்து கம்பு மாவோடு கலக்கவும். கடாயை அடுப்பில் ஏற்றி, கருப்பட்டியை இட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி கரைத்து வடிகட்டவும். பிறகு வடிகட்டிய கரைசலைக் குறைந்த தீயில்  கொதிக்க விடவும். அடுத்து ஏலக்காய்ப்பொடி, பனீர் சேர்த்து கட்டி விழாமல் கிளறி, கம்புமாவை ஒவ்வொரு டேபிள்ஸ்பூனாகச் சேர்த்து கட்டி விழாமல் கிளறவும். மாவு கருப்பட்டியோடு சேர்ந்து சட்டியில் ஒட்டாத பதம் வரும்போது இறக்கவும். மாவு இளஞ்சூடாக இருக்கும் போதே உள்ளங்கையில் நெய் தடவி, மாவை உருண்டையாகப் பிடித்து காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்.

 

No comments:

Post a Comment