Sunday, 2 October 2016

காளன்

காளன்

காளன்

 

தேவையானவை:

 நேந்திரங்காய் - 2

 சேனைக்கிழங்கு - 250 கிராம்

 மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 தயிர் - கால் கப்

 உப்பு - தேவையான அளவு

 

அரைக்க:

 துருவிய தேங்காய் - முக்கால் கப்

 சீரகம் - 1 டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - 1 டேபிள்ஸ்பூன்

 

தாளிக்க:

 கடுகு - 1 டீஸ்பூன்

 வெந்தயம் - அரை டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 1

 கறிவேப்பிலை - 5 இலைகள்

 

செய்முறை:

நேந்திரங்காய் மற்றும் சேனைக்கிழங்கை, மீடியம் சைஸ் துண்டுகளாகத் தோல் நீக்கி கழுவி பிரஷர் குக்கரில் மிளகுத்தூள், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் சேர்த்து மிக குறைந்த அளவில் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் வரும் வரை வேக விடவும். தண்ணீர் இருந்தால், அடுப்பில் மீண்டும் வைத்து, தண்ணீரை வற்ற விடவும். அடுப்பை அணைத்து காய்கறிகளை லேசாக மசித்துக் கொள்ளவும். மீண்டும் குக்கரை அடுப்பில் ஏற்றி சிம்மில் வைத்து தயிரைச் சேர்த்துக் கலக்கவும். அரைக்கக் கொடுத்தவற்றை மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும். இதை காய்கறிக் கலவையில் சேர்த்துக் கலக்கி, சில நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும்.

அடுப்பில் வாணலியை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை, தாளித்து கலவையில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment