பாலக் பூரி
பாலக் பூரி
தேவையானவை:
பாலக்கீரை - 150 கிராம்
இஞ்சி - ஒரு துண்டு
பூண்டு - 1
பச்சை மிளகாய் - 2
கோதுமை மாவு - 250 கிராம்
சர்க்கரை - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
பாலக்கீரையைக் கழுவி சற்று பெரியதாக நறுக்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் கீரை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் வேக விடவும். கீரை மிருதுவாகி வெந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும். மிக்ஸி ஜாரில் கீரைக் கலவையைச் சேர்த்து மையாக அரைத்து வைக்கவும். கோதுமை, சர்க்கரை, உப்பு, அரைத்த கீரை கலவை சேர்த்து பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். மாவைப் பிசைந்து ஐந்து நிமிடம் தனியாக வைக்கவும். பின்பு, பூரிகளாக பொரித்தெடுக்கவும். இதற்கு ஊறுகாய் அல்லது உருளைக்கிழங்கு மசாலா அருமையாக இருக்கும்.

No comments:
Post a Comment