புதினா சாதம்
புதினா சாதம்
தேவையானவை:
வேக வைத்த சாதம் - 200 கிராம்
புதினா இலைகள் - 200 கிராம்
பச்சை மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 8 (சற்று பெரியதாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன் (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)
பச்சை நிற குட மிளகாய் - 40 கிராம் (டைஸ் வடிவில் நறுக்கவும்)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை - அலங்கரிக்க
தாளிக்க:
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பிரிஞ்சி இலை - 1
சீரகம் - கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்
முந்திரி - 8
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
வடித்த சாதத்தை வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும். மிக்ஸியில் புதினா, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து எடுக்கவும். அடுப்பில் கடாயை வைத்து தாளிக்கக் கொடுத்தவற்றை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்துத் தாளிக்கவும். இதில் பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கி, குடமிளகாய், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதில் அரைத்த புதினா விழுதைச் சேர்த்து இரண்டு நிமிடம் மிதமான தீயில் பச்சை வாசனை போக வதக்கவும். இத்துடன் வடித்த சாதத்தைச் சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு கலக்கவும். அற்புதமான புதினா சாதம் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள அப்பளம் அல்லது வடகம் பொருத்தமாக இருக்கும்.

No comments:
Post a Comment