Wednesday, 5 October 2016

வெஜிடபிள் ஸ்பெகட்டி

வெஜிடபிள் ஸ்பெகட்டி

வெஜிடபிள் ஸ்பெகட்டி

 

தேவையானவை:

 

ஸ்பெகட்டி - 100 கிராம்

(கோதுமை ஸ்பெகட்டி- டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

பெரிய வெங்காயம் - 1 (ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

பச்சை, சிவப்பு, மஞ்சள் நிற குடமிளகாய் - 40 கிராம் (பெரிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்)

கேரட் - 50 கிராம் (நீளமாக நறுக்கவும்)

பொடியாக நறுக்கிய பூண்டு  - 1 டேபிள்ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய்  - 2 டேபிள்ஸ்பூன்

சில்லி ஃப்ளேக்ஸ் - சிறிதளவு (டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்)

உப்பு, மிளகுத்தூள்  - தேவையான அளவு

சர்க்கரை - கால் டீஸ்பூன்

சோயா சாஸ்  - அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

கொத்தமல்லித்தழை  - அலங்கரிக்க‌

 

செய்முறை:

 

ஸ்பெகட்டியை தனியாக வேக வைத்து எடுத்து குளிர்ந்த நீரில் காட்டி கழுவி, ஈரத்தை வடித்து தனியாக வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூண்டு, சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து வதக்கவும். இதில் வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி, கேரட் சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் கிளறவும். இத்துடன் குடமிளகாய் சேர்த்து சில நிமிடம் வதக்கவும். வேக வைத்த ஸ்பெகட்டி, சர்க்கரை, உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ் சேர்த்து சில நிமிடம் வதக்கவும்.  இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும். இறக்கியவுடன் லஞ்ச் பாக்ஸில் வைத்தால், அதே சூட்டோடு மதியம் சாப்பிட சூப்பராக இருக்கும்.

 

No comments:

Post a Comment