Tuesday, 4 October 2016

ஆலூ கி கோஃப்தா

ஆலூ கி கோஃப்தா

ஆலூ கி கோஃப்தா

 

தேவையானவை:

 

எண்ணெய் - தேவையான அளவு

 

கோஃப்தா செய்ய:

 

 உருளைக்கிழங்கு - 2

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

 கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன்

 சீரகத்தூள் - கால் டீஸ்பூன்

 ஆம்சூர் பவுடர் - கால் டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 முந்திரி - 3 (நறுக்கியது)

 கிஸ்மிஸ் (உலர் திராட்சை) - 5

 உப்பு - தேவையான அளவு

 

பக்கோடா செய்ய:

 

 கடலை மாவு - அரை கப்

 மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 தண்ணீர் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். இத்துடன் கோஃப்தா செய்யக் கொடுத்தவற்றில் மீதம் இருக்கும் மற்ற பொருட்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து நன்கு கிளறி, மீடியம் சைஸ் உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

 

இனி, பக்கோடா செய்ய கொடுத்தவற்றை எல்லாம் ஒரு பவுலில் சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் விட்டு கலக்கவும். அதிக தண்ணீராக இல்லாமல் பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிறகு, உருளைக்கிழங்கு உருண்டைகளை கரைத்த மாவில் முக்கியெடுத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரித்தவற்றை, டிஷ்யூ பேப்பரில் வைத்து அதிகப்படியான எண்ணெயை டிஷ்யூ பேப்பர் உறிஞ்சியதும் சட்னி அல்லது கெட்சப்புடன் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment