Tuesday, 4 October 2016

பாலடை போளி

பாலடை போளி

பாலடை போளி

 

பூரணத்துக்கு:

 

 பாலடை - ஒரு கப்

 தேங்காய்த்துருவல் - அரை கப்

 வெல்லம் - ஒரு கப்

 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 நெய் - 2 டேபிள்ஸ்பூன்

 பொட்டுக்கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய், நெய் இரண்டும் கலந்தது - 3 டேபிள்ஸ்பூன்

 

மேல்மாவுக்கு:

 

 மைதா மாவு - ஒரு கப்

 லெமன் ஃபுட்கலர் - அரை டீஸ்பூன்

 வெண்ணெய், வெள்ளை ரவை - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து பாலடையைச் சேர்த்து அளவான நீர் விட்டு வேகவைத்து தண்ணீரை வடித்து மிக்ஸியில் லேசாக ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். மேல் மாவுக்குக் கொடுத்தவற்றை நீர் சேர்த்து சப்பாத்தி மாவை விட சற்றுத் தளர்த்தியாகப் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும். கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு பாலடையை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் துருவிய வெல்லம், தேங்காய்த்துருவல், கால் கப்புக்கும் குறைவான நீர் விட்டுக் கொதிக்க விடவும். வெல்லமும், தேங்காயும் சேர்த்துக் கொதித்ததும் (பாகு கம்பி பதம் விழக் கூடாது) ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறவும். இத்துடன் அரைத்த பாலடை விழுது சேர்த்து நன்றாகக் கலந்து பொட்டுக்கடலை மாவையும் தூவிக் கலந்து இறக்கவும்.

 

பிறகு கைகளால் சிறுசிறு உருண்டைகளாக உருட்டவும். பிசைந்த மேல் மாவை உருண்டையாக எடுத்து பாலிதீன் கவர் (அ) வாழை இலையில் தட்டி, மேலே ஒரு உருண்டை பூரணத்தை வைத்து மூடி போளியாகத் தட்டி தவாவில் போட்டு நெய், எண்ணெய் சேர்ந்ததை சிறிதளவு ஓரங்களில் விட்டு ஒரு புறம் வெந்ததும், திருப்பிப் போட்டு எடுக்கவும்.

No comments:

Post a Comment