Tuesday, 4 October 2016

பாலடை சப்ஜி

பாலடை சப்ஜி

பாலடை சப்ஜி

 

தேவையானவை:

 

 பாலடை - கால் கப்

 பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று

 கேரட்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்

 பூண்டுப் பல் - 3

 பச்சைப் பட்டாணி -   6 டேபிள்ஸ்பூன்

 சப்ஜி மசாலா (அ) கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

வறுத்துப் பொடிக்க:

 

 தேங்காய் எண்ணெய் -   ஒரு டீஸ்பூன்

 மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

 சீரகம் - ஒரு டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 3

 தேங்காய்த்துருவல் - கால் கப்

 

அலங்கரிக்க:

 

 கஸூரிமேத்தி (அ) நறுக்கிய கொத்தமல்லித்தழை -  ஒரு டேபிள்ஸ்பூன்

 

செய்முறை:

 

வாணலியில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானதும், வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து நீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு பாலடையை சேர்த்து வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். பிறகு பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளி சேர்த்து கரைய வதக்கவும். பிறகு உப்பு, ஒரு கப் நீர் சேர்த்து கொதிக்க விடவும். கலவை நன்கு கொதித்ததும் உரித்த பச்சைப் பட்டாணியையும், கேரட் துருவலையும் சேர்க்கவும். இரண்டும் நன்கு வெந்ததும் வறுத்த பாலடையையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து வெந்ததும் அரைத்த விழுதையும் சேர்த்து மேலும் ஓரிரு கொதிகள் வந்தது, கரம் மசாலாத்தூள் (அ) சப்ஜி மசாலாத் தூவி இறக்கவும். அலங்கரிக்கக் கொடுத்தவற்றைத் தூவி அலங்கரிக்கவும்.

 

குறிப்பு:

 

வித்தியாசமான இந்த பாலடை சப்ஜி, சப்பாத்தி, நாண் போன்றவற்றுக்கு ஏற்ற சைட் டிஷ்.

 

No comments:

Post a Comment