Saturday 8 October 2016

மசாலா மக்ரோனி

மசாலா மக்ரோனி

மசாலா மக்ரோனி

 

தேவையானவை: பிடித்த வடிவம் கொண்ட மக்ரோனி  ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 2, மிளகாய்த்தூள்  தேவையான அளவு, பூண்டு - 4 பல், தக்காளி கெட்ச் அப் - 2 டீஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு

 

செய்முறை: வெங்காயம், தக்காளியை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கவும். பூண்டுப்பல்லைப் பொடியாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, மக்ரோனியைப் போட்டு, சிறிது எண்ணெய் சேர்த்து, இரண்டு கொதி வரும் வரை வேகவைக்கவும். பிறகு தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் அலசிக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் விட்டு, காய்ந்ததும், பூண்டு, வெங்காயம் போட்டு, கண்ணாடி போல பளபளப்பாக வரும் வரை வதக்கவும். பிறகு தக்காளியைப் போட்டு, அது மசியும் வரை வதக்கவும். அதோடு, உப்பு, மிளகாய்த்தூள், தக்காளி கெட்ச்அப் சேர்க்கவும். பிறகு, வேகவைத்த மக்ரோனியையும் சேர்த்து, நன்கு கிளறவும். தேவைப்பட்டால், சீஸைத் துருவி, மேலே தூவிப் பரிமாறலாம். குளிருக்கு இதமான காரசார ஸ்நாக்ஸ் இது.

 

 

No comments:

Post a Comment