Saturday 8 October 2016

சீஸ் நாக்கோஸ்

சீஸ் நாக்கோஸ்


சீஸ் நாக்கோஸ்

 

தேவையானவை: ப்ளெயின் நாக்கோஸ் சிப்ஸ் (சூப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்)  ஒரு கப், பச்சை, மஞ்சள், சிவப்பு நிற குடமிளகாய் (நீளமாக நறுக்கப்பட்ட துண்டுகள்)  கால் கப், வேகவைத்த ஸ்வீட்கார்ன்  ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம்  கால் பகுதி, பார்ஸ்லி இலை / கொத்தமல்லித்தழை  சிறிதளவு, சீஸ் ஸ்லைஸ் - 1.

 

சாஸ் தயாரிக்க: மயோனைஸ்  கால் கப், தக்காளி கெட்ச்அப் - 4 டீஸ்பூன், சிவப்பு மிளகாய் சாஸ்  ஒரு டீஸ்பூன்.

 

 

 

செய்முறை: ஒரு பவுலில் மயோனைஸ், தக்காளி கெட்ச்அப் மற்றும் மிளகாய் சாஸ் சேர்த்துக் கலந்து தனியே வைக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லிசாக நறுக்கி, குடமிளகாய்த் துண்டுகள், ஸ்வீட் கார்ன் மற்றும் கொத்தமல்லித்தழையைச் சேர்த்துக் கலக்கவும், கலந்து வைத்திருக்கும் சாஸையும் சேர்க்கவும். பரிமாறப் போகும் சமயத்தில், நாக்கோஸ் சிப்ஸையும் சேர்த்து, சிப்ஸை மூடும் அளவுக்கு சாஸை மேலே ஊற்றவும். சீஸை நறுக்கி, சிப்ஸின் மேலே போட்டு, பதினைந்து விநாடிகள் மைக்ரோவேவ் அவனில் வைத்து எடுத்தால், லேசாக உருகி, சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

 

No comments:

Post a Comment