Saturday 8 October 2016

கார்ன் பான்கேக்

கார்ன் பான்கேக்

கார்ன் பான்கேக்

 

தேவையானவை: வேகவைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள்-  2 கப், பாம்பே ரவை (சிரோட்டி ரவா)  ஒரு கப், மைதா  2 டீஸ்பூன், ஃப்ரெஷ் தயிர்  ஒரு கப், கேரட் - 1, கொத்தமல்லித்தழை  சிறிதளவு, எண்ணெய், உப்பு  தேவையான அளவு

 

செய்முறை: கேரட்டைக் கழுவி, துருவிக் கொள்ளவும். கொத்தமல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும். ரவை, மைதா, தயிர் மூன்றையும் ஒரு பவுலில் இட்டுக் கலந்து இரண்டு மணி நேரங்கள் ஊற வைக்கவும். ஒரு கப் கார்னை எடுத்து, மிக்ஸியில் போட்டு, கொரகொரப்பாக அரைத்து, ஊறிக் கொண்டிருக்கும் மைதாதயிர் கல‌வையோடு சேர்த்துக் கலக்கவும். அதில், தேவையான அளவு உப்பு, தேவையான அளவு தண்ணீர் தெளித்து, கெட்டியான மாவாகக் கரைத்து வைக்கவும். கேரட் துருவலையும், நறுக்கின கொத்தமல்லித்தழையையும் மீதி இருக்கும் கார்ன் முத்துக்களையும் கலந்து தனியே வைக்கவும். தோசை தவாவைக் காயவைத்து, கரைத்த மாவை சின்னச் சின்ன ஊத்தப்பங்களாக ஊத்தி, சுற்றிலும் எண்ணெய் ஊற்றி மேலே, கேரட், கார்ன், கொத்தமல்லித்தழைக் கலவையைத் தூவி பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். நம்ம ஊரின் இந்த ஊத்தப்பம்தான், அயல்நாடுகளில் 'பான் கேக்'.

 

No comments:

Post a Comment