Saturday 1 October 2016

மொளவு தண்ணி சூப்

மொளவு தண்ணி சூப்

மொளவு தண்ணி சூப்

 

தேவையானவை:

 வெள்ளை சுதும்பு மீன் - அரை கிலோ

 சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கவும்)

 பூண்டு - 10 பல்

 பச்சை மிளகாய் - ஒன்று

 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை

 நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

அரைக்க:

 சோம்பு, சீரகம் - அரை டீஸ்பூன்

 தேங்காய் - ஒரு பத்தை

 மிளகு - ஒன்றரை டீஸ்பூன்

 தனியா - அரை டீஸ்பூன்

 சின்ன வெங்காயம் - 4

 பூண்டு - 5 பல்

 அரைக்க வேண்டியதை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். விழுதாக அரைக்கத் தேவையில்லை.

 

செய்முறை:

மீனைக் கழுவி வைக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு கொதித்ததும் மீனைச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் அடுப்பை சிம்மில் 10 நிமிடம் வைத்து வேக விடவும். இறுதியாக கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும். இதே முறையில் முட்டை சேர்த்தும் செய்யலாம். அதாவது குழம்பு கொதித்ததும் நான்கு முட்டையை உடைத்து ஊற்றவும். 5 நிமிடம் சிம்மில் வைத்து முட்டையை வேக விடவும். பின் முட்டையை கரண்டியால் மெதுவாக விலக்கி விடவும். மேலும் ஐந்து நிமிடம் வேகவிட்டு சூப் கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

 

குறிப்பு:

மிளகை ஊர் பாஷையில் 'மொளவு' என்றே சொல்வதால்தான் இதற்கு மொளவு தண்ணி சூப் எனப் பெயர். குழந்தை பெற்ற பெண்கள் தினமும் இந்தச் சூப்பை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

No comments:

Post a Comment