Saturday 1 October 2016

பாச்சோறு

பாச்சோறு

பாச்சோறு

 

தேவையானவை:

 பொன்னி அரிசி (சன்ன ரகம்) - 500 கிராம்

 பெரிய தேங்காய் - 4

 ஒயிட் எசன்ஸ் - ஒரு மூடி/5 மில்லி

 சர்க்கரை - 2 கிலோ

 முந்திரி, பாதாம், பிஸ்தா - தலா 50 கிராம்

 உப்பு - ஒரு சிட்டிகை.

 

செய்முறை:

முந்திரி, பாதாம், பிஸ்தாவை ஊற வைத்து தோல் நீக்கி நீள ஸ்லைஸாக நறுக்கிக் கொள்ளவும். தேங்காய்களை துருவிக்கொள்ளவும் (அடிப்பகுதியில் இருக்கும் பிரவுன் நிறம் வரும் வரை துருவ வேண்டாம்). கனமான அடிப்பகுதியுள்ள சட்டியை அடுப்பில் வைத்து அரிசியைக் கழுவி, அரை வேக்காடு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்க்கவும். சர்க்கரை கரைந்து தண்ணீர் விடும். கலவை நன்றாகப் பொங்கி வரும் போது அதில் வரும் நுரையைக் கரண்டியால் எடுத்து விடவும். அரிசி முக்கால் பதம் வெந்ததும் தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். நன்றாக பாகு பதம் வந்ததும் நறுக்கி வைத்துள்ள முந்திரி, பாதாம், பிஸ்தா தூவி அடுப்பை அணைக்கவும். இறக்கும்போது எசன்ஸைச் சேர்க்கவும். இறக்கியதும் மூடியால் மூடக் கூடாது, வேர்த்து தண்ணீர் விடும். அதற்குப் பதில் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியால் கட்டி வைத்து விடவும். ஒரு மணி நேரம் கழித்துப் பரிமாறலாம்.

 

குறிப்பு:

தென் மாவட்டங்களில் இஸ்லாமியப் பெண்கள் கர்ப்பம் தரித்தவுடன் இந்தப் 'பாச்சோறு' இனிப்பு செய்து சொந்தங்களுக்குப் பகிர்வார்கள்.

No comments:

Post a Comment