Saturday, 1 October 2016

பொரிச்ச கறி

பொரிச்ச கறி

பொரிச்ச கறி

 

தேவையானவை:

மட்டன் - அரை கிலோ

தயிர் - 4 டீஸ்பூன்

இஞ்சி-பூண்டு விழுது - அரை டீஸ்பூன்

தேங்காய் விழுது - 2 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 4 (இரண்டிரண்டாக நறுக்கவும்)

கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிது

ரம்ப இலை - 1

உப்பு- தேவையான அளவு

மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

மல்லித்தூள் (தனியாத்தூள்) -  1 டீஸ்பூன்

எண்ணெய்/நல்லெண்ணெய் - தேவையான அளவு.

 

செய்முறை:

எண்ணெய் தவிர மற்ற பொருட்கள் அனைத்தையும் குக்கரில் ஒன்றாகச் சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு 2 விசில் வரை வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, தண்ணீர் இருந்தால் வற்ற விடவும். இதில்

5 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிப் பரிமாறவும். எண்ணெய் ஊற்றுவதால், இதற்கு 'பொரிச்ச கறி' என்று பெயர்.

 

குறிப்பு:

பிரசவித்த பெண்களுக்கும், பெரியவர்களுக்கும் தெம்பு வருவதற்காக கொடுக்கப்படும் ரெசிப்பி இது.

No comments:

Post a Comment