Monday, 26 September 2016

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு

மிளகுக் குழம்பு

 

தேவையானவை:

 புளி - சிறிய எலுமிச்சையளவு

 உப்பு - தேவையான அளவு

 மஞ்சள்தூள் - சிறிதளவு

 

அரைக்க:

 எண்ணெய் - சிறிதளவு

 மிளகு - 2 டீஸ்பூன்

 மல்லி (தனியா) - 2 டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2

 துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 

தாளிக்க:

 நல்லெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 கடுகு - அரை டீஸ்பூன்

 வெந்தயம் - அரை டீஸ்பூன்

 பெருங்காயம் - அரை டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை சிறிதளவு எண்ணெயில் நன்றாக மணம் வரும் வரை வறுத்து, ஆறியவுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும். புளிக்கரைசலுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல், அரைத்து வைத்துள்ள விழுது முதலியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும் குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்து வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கவும்.

 

குறிப்பு:

இந்தக் குழம்பு ஒரு வாரத்துக்கு நன்றாக இருக்கும். தேவையென்றால், தாளிக்கும்போது தோலுரித்த

10 பூண்டுப் பல் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment