மோர்க் குழம்பு
மோர்க் குழம்பு
தேவையானவை:
நறுக்கிய பூசணிக்காய் - ஒரு கப்
கெட்டியான மோர் - 3 கப்
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் - அரை கப்
பச்சைமிளகாய் - 5
துவரம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
பச்சரிசி - அரை டீஸ்பூன்
தாளிக்க:
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
பெருங்காயம் - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
செய்முறை:
பூசணிக்காயை தோல் நீக்கி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் துவரம்பருப்பு, அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தேங்காய், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வேக வைத்துள்ள பூசணிக்காயில் ஊற்றிக் கொதிக்க விடவும். மோருடன் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கி, கொதிக்கும் காய்கறியில் ஊற்றவும். பிறகு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, கொதிக்கும் குழம்பில் ஊற்றி இறக்கவும். கடைசியாக சிறிது கொத்தமல்லித்தழை சேர்க்கவும்.

No comments:
Post a Comment