Monday, 26 September 2016

ரசம்

ரசம்

ரசம்

 

தேவையானவை:

 பருப்புத்தண்ணீர் - ஒரு கப்

 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 ரசப்பொடி - 2 டீஸ்பூன்

 தக்காளி - ஒன்று

 பூண்டுப் பல் - 2

 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க:

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 கடுகு - ஒரு டீஸ்பூன்

 சீரகம், மிளகு - கால் டீஸ்பூன்

 பெருங்காயம் - சிறிதளவு

 காய்ந்த மிளகாய் - 2

 

செய்முறை:

புளியை சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்துக்கொள்ளவும். அத்துடன் பருப்புத்தண்ணீர், மஞ்சளதூள், ரசப்பொடி, மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி, தட்டிய பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். தக்காளியைக் கையால் மசித்து விடவும். இந்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொதிக்க விடவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இதில் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, கொதிக்கும் ரசத்தில் ஊற்றவும். ரசம் கொதித்து நுரை வரத் தொடங்கியதும் அடுப்பிலிருந்து இறக்கவும்.

No comments:

Post a Comment