Sunday, 25 September 2016

மட்டன் கொத்துக்கறி

மட்டன் கொத்துக்கறி

மட்டன் கொத்துக்கறி

 

தேவையானவை:

 கொத்துக்கறி - கால் கிலோ

 சின்ன வெங்காயம் - 200 கிராம்

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 4

 மஞ்சள்தூள் - சிறிதளவு

 பூண்டு - 10 பல் (தட்டிக்கொள்ளவும்)

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

 எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 தேங்காய்த்துருவல் - 2 டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 

செய்முறை:

மட்டன் கொத்துக்கறியை இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். தண்ணீரை இறுத்து கொத்துக்கறியை மட்டும் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, சோம்புத்தூள் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். இத்துடன் வேக வைத்த கொத்துக்கறியைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி போட்டு மிதமான தீயில் வேக வைக்கவும். பச்சை வாசனை போனதும் இறுதியாக தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment