Sunday, 25 September 2016

மட்டன் கொழுப்புக் குழம்பு

மட்டன் கொழுப்புக் குழம்பு

மட்டன் கொழுப்புக் குழம்பு

 

தேவையானவை:

 மட்டன் நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல், சுவரொட்டி - கால் கிலோ

 சின்ன வெங்காயம் - 200 கிராம்

 தக்காளி - 2

 மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்

 மிளகாய்தூள் - 2 டேபிள்ஸ்பூன்

 எண்ணெய் - தேவையான அளவு

 உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்

 பட்டை - ஒரு துண்டு

 கிராம்பு - 4

 கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 

அரைக்க:

 தேங்காய் - அரை மூடி

 சோம்பு - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டியை நன்கு சுத்தம் செய்யவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள நெஞ்செழும்பு, கொழுப்பு, ஈரல் மற்றும் சுவரொட்டி சேர்த்து நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்து வைத்திருக்கும் தேங்காய்-சோம்பு விழுதைச் சேர்த்து குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும். இட்லி, தோசை, ஆப்பத்துக்கு சுவையான குழம்பு ரெடி.

No comments:

Post a Comment