மட்டன் பக்கோடா
மட்டன் பக்கோடா
தேவையானவை:
எலும்பு இல்லாத மட்டன் - கால் கிலோ
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை:
மட்டனை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ளவும். இத்துடன் சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனில் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்கு பிசிறி வெயிலில் அரை மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் தீயை முற்றிலும் குறைத்து மட்டன் துண்டுகளைச் சேர்த்து அது வேகும் வரை எண்ணெயிலேயே பொரிய விட்டு எடுக்கவும். இறுதியாக கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment