பாண்டிச்சேரி இறால் குழம்பு
பாண்டிச்சேரி இறால் குழம்பு
தேவையானவை:
இறால் - கால் கிலோ
காய்ந்த மிளகாய் - 6 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்) + 2 (தாளிக்க)
தேங்காய் - கால் மூடி (துருவிக் கொள்ளவும்)
சின்ன வெங்காயம் - 50 கிராம் (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சைப்பழம் - 1 மீடியம் சைஸ்
செய்முறை:
காய்ந்த மிளகாய், தேங்காய், ஒரு டீஸ்பூன் சீரகத்தை மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்டாக அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் மீதம் இருக்கும் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். இதில் மஞ்சள் தூள், இறால், தேவையான அளவு தண்ணீர், உப்பு போட்டு சிம்மில் வைத்து வேக விடவும். இறால் வெந்ததும் எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கி, மூடி வைத்து பிறகு பரிமாறவும்.

No comments:
Post a Comment