Wednesday, 28 September 2016

காய்கறி கோலா உருண்டை

காய்கறி கோலா உருண்டை

காய்கறி கோலா உருண்டை

 

தேவையானவை:

 கேரட் - 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 பீன்ஸ் - 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 உருளைக்கிழங்கு - 100 கிராம் (சற்று பெரிய துண்டுகளாக்கவும்)

 முட்டைகோஸ் - 25 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி - 25 கிராம்

 பெரிய வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கவும்)

 பெரிய தக்காளி - 2 (பொடியாக நறுக்கவும்)

 இஞ்சி-பூண்டு விழுது - அரை டேபிள்ஸ்பூன் லவங்கப்பட்டை,

  கிராம்பு, ஏலக்காய் - தலா 2

 மிளகாய்த்தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

 கரம்மசாலாத் தூள் - அரை டேபிள்ஸ்பூன்

 கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

 தேங்காய்த்துருவல் - அரை மூடி (அரைத்துக் கொள்ளவும்)

 சோம்புத்தூள் - ஒரு டீஸ்பூன்

 பச்சை மிளகாய் - 1 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)

 எண்ணெய் - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்குடன், உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து வேகவிட்டு இறக்குவதற்கு முன், மற்ற காய்களைச் சேர்த்து 2 நிமிடம் கழித்து வடித்து வைக்கவும். இதில் தலா ஒரு சிட்டிகை மிளகாய்த்தூள், கரம்மசாலாத் தூள், சோம்புத்தூள், பாதியளவு வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்துப் பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கிக் கொள்ளவும். இதை எண்ணெயில் பொரித்து எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி லவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டுத் தாளித்து மீதம் இருக்கும் வெங்காயம் சேர்த்து நிறம் மாற வதக்கவும். இதில் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். இத்துடன், மீதம் இருக்கும் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சோம்புத்தூள், கரம்மசாலாத் தூள், சேர்க்கவும். பிறகு, அரைத்த தேங்காய் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக விடவும். கலவையின் பச்சை வாசனை போனதும், பொரித்த காய்கறி உருண்டைகளைப் போட்டு ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment