Wednesday, 28 September 2016

கத்திரிக்காய்-கருவாட்டுக் குழம்பு

கத்திரிக்காய்-கருவாட்டுக் குழம்பு

கத்திரிக்காய்-கருவாட்டுக் குழம்பு

 

தேவையானவை:

 நெத்திலி கருவாடு - கால் கிலோ

 கத்திரிக்காய் - கால் கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்)

 பச்சை மிளகாய் - 4 (இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்)

 சின்ன வெங்காயம் (உரிக்கவும்) - 50 கிராம்

 தக்காளி - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்)

 கடுகு - அரை டீஸ்பூன்

 எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்

 காய்ந்த மிளகாய் - 2 (இரண்டாக உடைத்துக் கொள்ளவும்)

 மிளகு - 1 டீஸ்பூன்

 சீரகம் - அரை டீஸ்பூன்

 பூண்டு - 5 பல்

 தேங்காய் - கால் மூடி (துருவிக் கொள்ளவும்)

 மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்

 புளி - பெரிய நெல்லிக்காய் அளவு

 கறிவேப்பிலை - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

வாணலியில் அரை டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், சீரகம், மிளகு, முழு வெங்காயம், முழுப் பூண்டு, கறிவேப்பிலை சிறிது, மல்லித்தூள் (தனியாத்தூள்), தேங்காய்த்துருவல் சேர்த்து வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட்டாக அரைக்கவும். கருவாட்டை சுடுதண்ணீரில் இரண்டு முறை கழுவி எடுத்து வைக்கவும். வாணலியில் மீதம் உள்ள எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், தக்காளி, கத்திரிக்காய் உப்பு, சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, போட்டு, பச்சை வாசனை போக சிறிது தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். புளிக்கரைசலை ஊற்றி, கருவாடு சேர்த்து ஒரு புரட்டு புரட்டி சிம்மில் ஐந்து நிமிடம் வைத்து கொதிக்கவிட்டு இறக்கினால், சூப்பர் கருவாட்டுக் குழம்பு ரெடி.

No comments:

Post a Comment