Sunday, 25 September 2016

பிரெட் நூடுல்ஸ் கட்லெட்

பிரெட் நூடுல்ஸ் கட்லெட்

பிரெட் நூடுல்ஸ் கட்லெட்

 

தேவையானவை :

 பிரெட் - 10

 பொடியாக நறுக்கிய கேரட் - ஒன்று

 பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் - கால் கப்

 பொடியாக நறுக்கிய குடமிளகாய் - ஒன்று

 பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - கால் கப்

 வேக வைத்த நூடுல்ஸ் - கால் கப்

 சில்லி சாஸ் - அரை டேபிள்ஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்

 தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

 சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 வெண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை :

அடுப்பில் பேனை வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும் பொடியாக நறுக்கிய கேரட், முட்டைகோஸ், குடமிளகாய் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும். பிறகு, இதில் சில்லி சாஸ், பூண்டு, தக்காளி சாஸ், சோயா சாஸ், உப்பு, வேகவைத்த நூடுல்ஸ், வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். இனி, பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு தண்ணீரில் முக்கி எடுத்து பிரெட் உடையாத அளவுக்குப் பிழியவும். இனி, பிழிந்த பிரெட்டை உள்ளங்கையில் வைத்து குழிவாக்கி அதன் நடுவில் நூடூல்ஸ் மசாலாவை வைத்து உருண்டையாகப் பிடிக்கவும். மசாலா வெளியே வராத அளவுக்கு உருண்டையைத் தட்டையாக்கி, சூடான தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

No comments:

Post a Comment