மிக்ஸ்ட் வெஜ் மூங் ஃபேவரி
மிக்ஸ்ட் வெஜ் மூங் ஃபேவரி
தேவையானவை :
பாசிப்பருப்பு - ஒரு கப்
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
தயிர் - 3 டேபிள்ஸ்பூன்
ஆப்ப சோடா - கால் டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
துருவிய கேரட் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் -
2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒன்று
துருவிய பனீர் - கால் கப்
பொடியாக நறுக்கிய குடமிளகாய் -
2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உலர்ந்த மாங்காய்த்தூள் -அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் பச்சைமிளகாய், ஊற வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி அரைத்தெடுத்து ஒரு பவுலில் தனியாக வைக்கவும். இதில் கடலை மாவு, தயிர், ஆப்ப சோடா, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் துருவிய கேரட், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ், வெங்காயம், குடமிளகாய், துருவிய பனீர், உப்பு, மிளகாய்த்தூள், உலர்ந்த மாங்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து தனியாக வைத்துக்கொள்ளவும். தோசைக் கல்லை சூடாக்கி, கரைத்த மாவை ஊற்றி, இதில் காய்கறிகளைத் தூவி, சுற்றிலும் எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

No comments:
Post a Comment