Tuesday, 27 September 2016

மிக்ஸ்டு வெஜ்டபிள் சட்னி

மிக்ஸ்டு வெஜ்டபிள் சட்னி

மிக்ஸ்டு வெஜ்டபிள் சட்னி

 

தேவையானவை:

 புடலங்காய் - ஒன்றில் பாதி

 செளசெள - ஒன்றில் பாதி

 குடமிளகாய் - ஒன்று

 பச்சைமிளகாய் - 5

 தக்காளி - 2

 புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

 புதினா இலை - சிறிதளவு

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 

தாளிக்க :

 கடுகு, உளுத்தம்பருப்பு  -

   தலா ஒரு டீஸ்பூன்

 கறிவேப்பிலை - சிறிதளவு

 எண்ணெய் - 50 மில்லி

 பெருங்காயம் - ஒரு டீஸ்பூன்

 

செய்முறை :

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் புளி தவிர மற்ற அனைத்துப் பொருட்களையும் சேர்த்து வதக்கி, சூடு ஆறியதும் இத்துடன் புளி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து தனியே வைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து சட்னியில் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment