வெஜிடபிள் நீலகிரி குருமா
வெஜிடபிள் நீலகிரி குருமா
தேவையானவை:
கேரட் - 50 கிராம்
பீன்ஸ் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 50 கிராம்
காலிஃபிளவர் - 50 கிராம்
குடமிளகாய் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மசாலா தயாரிக்க :
மல்லித்தூள் (தனியாத்தூள்) - ஒரு டேபிள்ஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
கசகசா - ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒன்றில் பாதி
பூண்டு - 10 பல்
இஞ்சி - ஒரு துண்டு
பச்சைமிளகாய் - 6
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
கசகசகாவை 10 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவும். கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃபிளவர் ஆகியவற்றை விரும்பும் வடிவில் நறுக்கி, உப்பு சேர்த்து பத்து நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளி மற்றும் குடமிளகாயை பொடியாக நறுக்கித் தனியே வைத்துக்கொள்ளவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மசாலா அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கி ஆறவைக்கவும். இதில், சிறிது தண்ணீர் தெளித்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். மற்றொரு வாணலியில், சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய், புதினா, சேர்த்து வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாக் கலவையுடன் உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். இதில் வேக வைத்த காய்களை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க விட்டு, கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment