கொத்தமல்லித்தழை சாதம்
கொத்தமல்லித்தழை சாதம்
தேவையானவை:
பச்சரிசி - அரை கிலோ
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 10 பல்
தக்காளி - 2 பெரியது
காய்ந்த மிளகாய் - 2
பச்சைமிளகாய் - 4
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைக்க :
புதினா - 25 கிராம்
கொத்தமல்லித்தழை - 100 கிராம்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - ஒரு டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்
கடலைப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
பச்சரிசியை வேக வைத்து உதிரியாக வடித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி புதினா, கொத்தமல்லித்தழை மற்றும் கடலைப்பருப்பை லேசாக வதக்கி, ஆறியதும் மிக்ஸியில் நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும். அதே வாணலியில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு இவற்றைச் சேர்த்து பச்சைவாசனை போகும்வரை நன்கு வதக்கவும். இத்துடன் காய்ந்த மிளகாய், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்க்கவும். இவை கலவையாகி, மேலே, எண்ணெய் சுருண்டு வரும் வரை வதக்கி, இதை சூடான பச்சரிசி சாதத்தில் சேர்த்து சாதம் உடையாமல் கிளறிப் பரிமாறவும்.

No comments:
Post a Comment