Wednesday, 28 September 2016

காரைக்குடி காடை ஃப்ரை

காரைக்குடி காடை ஃப்ரை

காரைக்குடி காடை ஃப்ரை

 

தேவையானவை:

 

 முழு காடை - 400 கிராம்

 சின்ன வெங்காயம் - 10

 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா ஒரு டேபிள்ஸ்பூன்

 மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்

 இஞ்சி-பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு - தலா 1 டீஸ்பூன்

 பச்சைமிளகாய் - 1 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்

 கடலைமாவு - ஒரு டேபிள்ஸ்பூன்

 முட்டை - 1

 எலுமிச்சைச் சாறு - ஒரு பழச்சாறு

 கறிவேப்பிலை - சிறிதளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு

 

செய்முறை:

 

வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். காடையை நன்கு சுத்தம் செய்து, அதன் இரு கால்களிலும் ஒரு கீறல் செய்யவும் (அப்போதுதான் கறி நன்றாக வேகும்).

 

ஒரு பவுலில் இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், கடலைமாவு, முட்டை, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் கறிவேப்பிலை, எலுமிச்சைச் சாறு, உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு கலக்கவும். இதில் காடையைச் சேர்த்து காடையில் மசாலா நன்கு பரவுமாறு புரட்டி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

 

வாணலியில் எண்ணெய் சூடானதும் மசாலா காடையைச் சேர்த்து நன்றாக வேகவிட்டு எடுத்தால், சுவையான காரைக்குடி காடை ஃப்ரை தயார்.

No comments:

Post a Comment