Wednesday, 28 September 2016

பாதாம் கீர்

பாதாம் கீர்

பாதாம் கீர்

 

தேவையானவை:

 

 பாதாம் பருப்பு - 50 கிராம்

 காய்ச்சியபால் - அரை லிட்டர்

 சர்க்கரை - தேவையான அளவு

 ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்

 பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி - சிறிதளவு

 நெய் - ஒரு டேபிள்ஸ்பூன்

 இனிப்பில்லாத கோவா - 25 கிராம்

 

செய்முறை:

 

பாதாமை தண்ணீரில் ஊறவைத்து தோல் நீக்கவும். சிறிதளவு பாலுடன் பாதாம் மற்றும் கோவாவைச் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். மீதம் இருக்கும் பாலைச் சேர்த்து சுண்ட காய்ச்சி, அரைத்து வைத்திருக்கும் பாதாம் கலவையைச் சேர்த்து கெட்டிப் படாமல் கிளறவும். தீயைக் குறைத்து சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறிவிட்டு இறக்கவும். இந்த பாதாம் கீருடன் நெய்யில் வறுத்த பாதாம், பிஸ்தா, முந்திரியை தூவி பவுலில் சூடாகப் பரிமாறலாம்

 

குறிப்பு:

 

பாதாம் கீரை ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் பரிமாறலாம்.

No comments:

Post a Comment