Wednesday, 28 September 2016

நல்லி ரோகன் ஜோஸ்

நல்லி ரோகன் ஜோஸ்

நல்லி ரோகன் ஜோஸ்

 

தேவையானவை:

 

 கறியுடன் கூடிய மட்டன் நல்லி எலும்பு - அரை கிலோ

 பெரிய வெங்காயம் - 4

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்

 தக்காளி - 5

 மல்லித்தூள் (தனியாத்தூள்) -

  ஒரு டீஸ்பூன்

 காஷ்மீரி மிளகாய்த்தூள் -

  ஒரு டேபிள்ஸ்பூன்

 பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா 2

 முந்திரி - 25 கிராம்

 எண்ணெய் - 50 மில்லி

 கரம்மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன்

 கஸூரி மேத்தி - தலா அரை டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 

செய்முறை:

 

தக்காளியைக் கொதிக்கும் நீரில் வேகவைத்து, தோல் நீக்கி, மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். முந்திரியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காயைச் சேர்த்து பொன்னிறமாக வரும்போது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி விழுது, மட்டன் நல்லி எலும்பு ஆகியவற்றைச் சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), கரமசாலாத்தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றவும். இனி தீயைக் குறைத்து நல்லி எலும்பை நன்றாக வேகவிடவும். இறுதியாக முந்திரி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக கொதித்ததும், கஸூரி மேத்தியைச் சேர்த்து சிறிது நேரம் கிளறி இறக்கினால், நல்லி ரோகன் ஜோஸ் ரெடி.

 

குறிப்பு:

 

கிரேவிக்கு, தேவைக்கேற்ப நல்லியுடன் தண்ணீரைப் பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment