Wednesday, 28 September 2016

ஸ்வீட் கார்ன் வெஜிடபுள் சூப்

ஸ்வீட் கார்ன் வெஜிடபுள் சூப்

ஸ்வீட் கார்ன் வெஜிடபுள் சூப்

 

தேவையானவை:

 கேரட் - 50 கிராம்

 பீன்ஸ் - 25 கிராம்

 குடமிளகாய் - 25 கிராம்

 முட்டைகோஸ் - 25 கிராம்

 வெங்காயத்தாள் (நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்

 ஸ்வீட் கார்ன் - 200 கிராம்

 சோயா சாஸ் - கால்டீஸ்பூன்

 சர்க்கரை - 1 டீஸ்பூன்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 சோள மாவு - 2 டீஸ்பூன்

 தண்ணீர் - கால் கப்

 

செய்முறை:

காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெஜிடபுள் ஸ்டாக்கை ஊற்றி சூடுபடுத்திக்கொள்ளவும். அதனுடன் பொடியாக நறுக்கிய காய்கறிகளை சேர்த்து அரை வேக்காடு பதத்துக்கு வேக வைக்கவும். இவற்றுடன் ஸ்வீட் கார்ன் சேர்த்து இரண்டு நிமிடத்துக்கு வேகவிடவும். பிறகு, தேவையான அளவு உப்பு, வெள்ளை மிளகுத்தூள், சோயா சாஸ், சர்க்கரை சேர்த்து கலந்து தீயைக் குறைத்து வைத்து வேக விடவும். கால் கப் தண்ணீரில் சோளமாவைக் கரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்கறிக் கலவையுடன் சேர்த்துக் கலக்கி, இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். இதில் வெங்காயத்தாள் துண்டுகள் தூவி, சூடாகப் பரிமாறவும்.

No comments:

Post a Comment