மிக்ஸ்டு வெஜிடபுள் சூப்
மிக்ஸ்டு வெஜிடபுள் சூப்
தேவையானவை:
கேரட் - 100 கிராம்
வெள்ளை நூல்கோல் - 30 கிராம்
பெரிய வெங்காயம் - 50 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
பச்சைப் பட்டாணி - 75 கிராம்
தக்காளி - 50 கிராம்
பீன்ஸ் - 30 கிராம்
வெஜிடபுள் ஸ்டாக் - ஒரு லிட்டர்
நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு
வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெஜிடபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்கவிட்டு, அதனுடன் நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து நன்கு வேகவிடவும். இதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் வெள்ளை மிளகுத்தூளைச் சேர்த்து, இரண்டு நிமிடத்துக்கு வேகவிட்டு இறக்கவும். பின்னர், பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித்தழையை சூப்பின் மீது தூவி சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment