வெஜிடபுள் கிளியர் சூப்
வெஜிடபுள் கிளியர் சூப்
தேவையானவை:
கேரட் - 25 கிராம்
பீன்ஸ் - 15 கிராம்
முட்டைகோஸ் - 15 கிராம்
குடமிளகாய் - 15 கிராம்
வெஜிடபுள் ஸ்டாக் - ஒரு லிட்டர்
வெங்காயத்தாள் (பொடியாக நறுக்கியது) - 15 கிராம்
வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகள் அனைத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெஜிடபுள் ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்கவிட்டு, பொடியாக நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து வேக விடவும். காய்கறிகள் அரைவேக்காடு பதத்துக்கு வெந்ததும், உப்பு மற்றும் வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து இரண்டு நிமிடத்துக்குக் கொதிக்க விட்டு, இறக்கினால், வெஜிடபுள் சூப் தயார். சூப்பின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் தூவி, சூப்பை சூடாகப் பரிமாறவும்.
No comments:
Post a Comment