Saturday 24 September 2016

ஆப்பம்

ஆப்பம்


ஆப்பம்

 

தேவையானவை:

 

மூங்கில் அரிசி  ஒரு கப்

 

இட்லி அரிசி  ஒரு கப்

 

பச்சரிசி  ஒரு கப்

 

சிவப்பு அவல்  அரை கப்

 

உளுந்து  4 டேபிள்ஸ்பூன்

 

வெந்தயம்  அரை டீஸ்பூன்

 

உப்பு  தேவையான அளவு

 

தேங்காய்த்துருவல்  அரை கப்

 

ஆப்ப சோடா  ஒரு சிட்டிகை

 

இளநீர்  ஒரு கப்

 

செய்முறை:

 

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 4 மணி நேரம் ஊற விடவும். மற்றொரு பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி மற்றும் உளுந்து, வெந்தயத்தைச் சேர்த்து 3 மணி நேரம் ஊற விடவும், அவலை ஒரு மணி நேரம் ஊற விடவும். பிறகு அவல் நீங்கலாக மற்ற எல்லாவற்றையும் கிரைண்டரில் ஒன்றாகச் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். இத்துடன் அவலையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து அரைக்கவும். பிறகு, உப்பு சேர்த்துக் கலக்கி, 8 மணி நேரம் புளிக்க விடவும். காலையில் ஆப்பம் சுடுவதற்கு முன் ஆப்ப சோடா, இளநீர் சேர்த்துக் கலக்கி, ஆப்பமாக சுட்டெடுக்கவும். தேங்காய்ப்பால் அல்லது ஸ்டியூவுடன் ஆப்பத்தைப் பரிமாறவும்.

 

No comments:

Post a Comment