Saturday, 24 September 2016

அரிசி கஞ்சி

அரிசி கஞ்சி

அரிசி கஞ்சி

 

தேவையானவை:

 

மூங்கில் அரிசி  அரை கப்

 

பாசிப்பருப்பு  கால் கப்

 

தக்காளி  ஒன்று

 

பெரிய வெங்காயம்  ஒன்று

 

பச்சை மிளகாய்  2

 

இஞ்சிபூண்டு விழுது  ஒரு டீஸ்பூன்

 

பட்டை  சிறிய துண்டு

 

சோம்பு  கால் டீஸ்பூன்

 

கிராம்பு  ஒன்று

 

ஏலக்காய்  ஒன்று

 

புதினா, கொத்தமல்லித்தழை  சிறிதளவு

 

உப்பு  தேவையான அளவு

 

மஞ்சள் தூள்  கால் டீஸ்பூன்

 

நெய்  2 டீஸ்பூன்

 

தேங்காய்ப்பால்  ஒரு கப்

 

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசியைச் சேர்த்து தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் ஊறவைத்து, பிறகு, தண்ணீர் இறுத்து நிழல் உலர வைத்து மிக்ஸியில் உடைத்துக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றி சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு சேர்த்துத் தாளிக்கவும். இத்துடன் நறுக்கிய பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து கரைய வதக்கி,இஞ்சிபூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பிறகு புதினா மற்றும் கொத்தமல்லித்தழைச் சேர்த்து வதக்கவும். இத்துடன் கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து 3 கப் நீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். இத்துடன் உடைத்த மூங்கில் அரிசி மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும். பிறகு, அடுப்பை சிம்மில் 20 நிமிடம் வைத்து அடுப்பை அணைக்கவும். பிரஷர் நீங்கியதும் மூடியைத் திறந்து நெய், புதினா மற்றும் கொத்தமல்லித்தழை தூவி, தேங்காய்ப்பால் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

No comments:

Post a Comment