மில்லட் நியூட்ரி பால்ஸ்
மில்லட் நியூட்ரி பால்ஸ்
தேவையானவை:
மில்லட் ஃப்ளேக்ஸ் - ஒரு கப்
பாதாம் பவுடர் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன்
தேன் - 2 டேபிள்ஸ்பூன்
பொடித்த வேர்க்கடலை - கால் கப்
பனங்கல்கண்டுப் பொடி - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்ப்பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
செய்முறை:
வெண்ணெயுடன் பனங்கல்கண்டுப்பொடி சேர்த்து நன்கு குழைத்துக் கொள்ளவும். மில்லட் ஃப்ளேக்ஸை கைகளால் நொறுக்கிக் கொள்ளவும். குழைத்து வைத்துள்ள வெண்ணெய் கலவையில் மில்லட் ஃப்ளேக்ஸ், பாதாம் பவுடர், பொடித்த முந்திரி, வேர்க்கடலை, தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு இதை சிறு உருண்டைகளாக உருட்டி, தேங்காய்ப்பொடியில் புரட்டியெடுத்துப் பரிமாறவும். எளிதான சத்தான தின்பண்டம் இது. படிப்பதற்கு நடுநடுவே சாப்பிடுவதற்கு மிகவும் ஏற்றது.

No comments:
Post a Comment