தினை-பேரீச்சை பான்கேக்
தினை-பேரீச்சை பான்கேக்
தேவையானவை:
தினைமாவு - அரை கப்
கோதுமைமாவு - அரை கப்
முட்டை - ஒன்று (விருப்பப்பட்டால்)
பால் - கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை
பேரீச்சம் பழம் - 10
பாதாம் பருப்பு - 6
வெண்ணெய் - 2 டீஸ்பூன்
வெனிலா எசன்ஸ் - ஒரு சொட்டு
செய்முறை:
தினை மாவு, கோதுமை மாவு, சிட்டிகை உப்பு பால் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தோசைமாவு பதத்துக்குக் கரைத்துக் கொள்ளவும். முட்டை சேர்ப்பதாக இருந்தால், முதலில் முட்டையை நன்கு அடித்து பிறகு மாவுடன் சேர்க்கவும். பேரீச்சம்பழத்தை விதை நீக்கி, சிறு துண்டங்களாக நறுக்கவும். பாதாம் பருப்பைப் பொடியாக நறுக்கவும். பேரீச்சம்பழம், பாதாம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். தோசைக் கல்லைச் சூடாக்கி, வெண்ணெயை உருக்கி மாவை ஊற்றி தோசை சுடவும். இருபுறமும் வேக விட்டு, அதன் நடுவே பேரீச்சம்பழம், பாதாம் கலவையை வைத்து மூடிப் பரிமாறவும். விருப்பப்பட்டால், சிறிய துண்டுகளாக நறுக்கியும் பரிமாறலாம். (முட்டை சேர்த்தால் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்) புரதமும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது, பாதாம் பருப்பு மூளையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

No comments:
Post a Comment