கம்பு-பாதாம் டிரிங்க்
கம்பு-பாதாம் டிரிங்க்
தேவையானவை:
கம்பு மாவு - 2 டேபிள்ஸ்பூன்
பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்
பால் - அரை டம்ளர் (தேவைப்பட்டால்)
செய்முறை:
ஒரு டம்ளர் நீரில் கம்பு மாவைக் கரைத்துக் கொதிக்க வைக்கவும். கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். ஆறிய கம்பு மாவுடன் பால், பாதாம்பவுடர், ஏலக்காய்த்தூள், கரைத்த வெல்லம் என எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும். இதை டம்ளரில் ஊற்றி சூடாகவோ, குளிர வைத்தோ பருகவும். பால் தேவைப்பட்டால் காய்ச்சிய பால் கூட சேர்த்துக் கொள்ளலாம். இதையே கெட்டியாக காய்ச்சி கூழாகவும் சாப்பிடலாம்.
கண் விழித்து படிப்பதனால் ஏற்படும் உடல் சூட்டை இந்த டிரிங்க் தணிக்கும். கம்பில் இரும்பு மற்றும் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. பாதாம் பவுடர் மூளை சுறுசுறுப்புடன் செயல்பட உதவும்.

No comments:
Post a Comment