வேர்க்கடலை வடை
வேர்க்கடலை வடை
தேவையானவை:
வேக வைத்த மூங்கில் அரிசி ஒரு கப்
பொடித்த வேர்க்கடலை அரை கப்
வெங்காயம் ஒன்று
பச்சைமிளகாய் விழுது ஒரு டீஸ்பூன்
இஞ்சித்துருவல் ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் தேவையான அளவு
சீரகத்தூள் ஒரு டீஸ்பூன்
புதினா, கொத்தமல்லித்தழை சிறிதளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மூங்கில் அரிசி சாதத்தைச் சேர்த்து நன்கு மசித்துக்கொள்ளவும். அதனுடன் வறுத்து பொடித்த வேர்க்கடலை, நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் விழுது, இஞ்சித்துருவல், சீரகத்தூள், புதினா, கொத்தமல்லித்தழை உப்பு சேர்த்து கெட்டியாகப் பிசையவும். பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி, சூடான எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுத்தால் வடை ரெடி.
இதே மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, பஜ்ஜி மாவில் முக்கியெடுத்து பொரித்தால் போண்டா தயார்.

No comments:
Post a Comment