மசாலா சீயம்
மசாலா சீயம்
தேவையானவை:
மூங்கில் அரிசி ஒரு கப்
பச்சரிசி ஒரு கப்
உளுந்து முக்கால் கப்
எண்ணெய், உப்பு தேவையான அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் ஒன்று
பொடியாக நறுக்கிய
பச்சை மிளகாய் 2,
பெருங்காயம் கால் சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
செய்முறை:
மூங்கில் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊறவிடவும். உளுந்தை மற்றொரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி, 3 மணி நேரம் ஊற விடவும். பிறகு அரிசி மற்றும் உளுந்தை அதிக நீர் விடாமல் கிரைண்டரில் நன்கு கெட்டியாக அரைக்கவும். அரைத்த மாவில் உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் சேர்த்துத் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பிறகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு போட்டு மாவில் சேர்த்துக் கிளறவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும், மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். மசாலா சீயம் ரெடி.

No comments:
Post a Comment