கசகசா பாயசம்
கசகசா பாயசம்
தேவையானவை:
கசகசா 100 கிராம்
தேங்காய்த்துருவல் ஒரு கப்
வெல்லம் ஒரு கப்
முந்திரி 10
ஏலக்காய்த்தூள் சிறிதளவு
தண்ணீர் ஒரு கப்
நெய் 2 டீஸ்பூன்
உலர்திராட்சை (கிஸ்மிஸ்) 6
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், வெறும் வாணலியில் கசகசாவைச் சேர்த்து நிறம் மாற வறுத்து ஆற வைக்கவும். சூடு ஆறியதும், கசகசாவுடன் தேங்காய்த்துருவல், சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். கனமான அடி பகுதியுள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். வெல்லம் கரைந்தவுடன், வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வெல்லப்பாகுடன் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் நன்கு கொதிக்க விடவும். அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து, நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர்திராட்சை சேர்த்து லேசாக வறுத்து பாயசத்துடன் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

No comments:
Post a Comment