Sunday, 25 September 2016

ஸ்ட்ராபெர்ரி சோயா பான் கேக்

ஸ்ட்ராபெர்ரி சோயா பான் கேக்

ஸ்ட்ராபெர்ரி சோயா பான் கேக்

 

தேவையானவை :

 கோதுமை மாவு - ஒரு கப்

 சோயா மாவு - ஒரு கப்

 ஆப்ப சோடா - கால் டீஸ்பூன்

 சர்க்கரை - ஒரு டேபிள்ஸ்பூன்

 ஸ்ட்ராபெர்ரி பழங்கள்- 12

 வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

 மிக்ஸ்டு ஃபுரூட் ஜாம் - தேவையான அளவு

 

செய்முறை :

கோதுமை மாவு, சோயா மாவு, ஆப்ப சோடா, சர்க்கரை ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். ஸ்ட்ராபெர்ரியை குறுக்காக நறுக்கிக்கொள்ளவும். ஒரு சின்ன பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவு ஜாமை சேர்த்து 2 டீஸ்பூன் தண்ணீர் விட்டு அதை லேசாக கரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும். தோசைக்கல்லை  அடுப்பில் வைத்து சூடாக்கி மாவை ஒரு கரண்டி எடுத்து ஊற்றி சுற்றிலும் வெண்ணெய் விட்டு மாவின் மேல் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து வேக விடவும். பின் பேன் கேக்கை திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும். இதை லஞ்ச் பாக்ஸில் வைத்து உருகிய ஜாமை பேன் கேக்கின் மேல் ஊற்றிக் கொடுக்கவும்.

No comments:

Post a Comment