பனீர் பீஸ் பாத்தி
பனீர் பீஸ் பாத்தி
தேவையானவை :
வேக வைத்து மசித்த பச்சைப் பட்டாணி - அரை கப்
துருவிய பனீர் - அரை கப்
வேகவைத்து மசித்த உருளைகிழங்கு - 2
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - கால் கப்
பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்
இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்
பால் - ஒரு டேபிள்ஸ்பூன்
ஓட்ஸ் - கால் கப்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஓட்ஸை வெறும் வாணலியில் பச்சை வாசனை போகும் வரை வறுத்துக் கொள்ளவும். ஒர் அகலமான பாத்திரத்தில் உருளைக்கிழங்கு, பச்சைப் பட்டாணி, பனீர், கொத்தமல்லித்தழை, இஞ்சி விழுது, பச்சை மிளகாய் விழுது, ஓட்ஸ், உப்பு எல்லாத்தையும் ஒன்றாகச் சேர்த்து கலந்துகொள்ளவும். பிறகு பாலை சேர்த்து பிசைந்து விருப்பப்பட்ட வடிவங்களில் பிடித்து, தவாவில் எண்ணெய் விட்டு, சுட்டு எடுக்கவும். இதற்கு தக்காளி சாஸ் தொட்டுக்கொள்ள கொடுக்கலாம்.

No comments:
Post a Comment