Monday, 26 September 2016

மஷ்ரூம் காட்டிரோல்

மஷ்ரூம் காட்டிரோல்

மஷ்ரூம் காட்டிரோல்

 

தேவையானவை:

 மொட்டுக் காளான் - 200 கிராம்

 தக்காளி - ஒன்று

 வெங்காயம் - ஒன்று

 இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்

 பட்டை - சிறிய துண்டு

 கிராம்பு - ஒன்று

 ஏலக்காய் - ஒன்று

 சோம்பு - கால் டீஸ்பூன்

 புதினா, கொத்தமல்லித்தழை - தேவையான அளவு

 உப்பு - தேவையான அளவு

 எண்ணெய் - 2 டீஸ்பூன்

 மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

 மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன்

 சப்பாத்தி - 4

 நெய் - 2 டீஸ்பூன்

 

செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, இஞ்சி, பூண்டு விழுது, சிறிது புதினா, கொத்தமல்லித்தழை இவற்றைச் சேர்த்து வதக்கவும். அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்க்கவும். சுத்தம் செய்த காளானை நறுக்கி அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிது நீர் தெளித்து வதக்கவும். காளான் வெந்ததும், மீதமுள்ள புதினா கொத்தமல்லித்தழை தூவிக் கிளறி இறக்கவும். சப்பாத்தியை எடுத்து சிறிது நெய் தடவி, காளான் மசாலாவை வைத்து சுருட்டிப் பரிமாறவும்.

தேர்வுக்குப் படிக்கும்போதோ, கிளம்பும்போதோ சாப்பிடாமல் செல்பவர்களுக்கு இப்படி ரோல் மாதிரி செய்து கொடுப்பதால் சாப்பிட லேசாக இருக்கும். மஷ்ரூம் புரதம் நிறைந்த உணவு. தேவையான சத்து கிடைப்பதால் சோர்வடையாமல் இருக்க முடியும். இந்த மசாலாவை இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம். சாதத்தில் போட்டும் சாப்பிடலாம். பிரெட்டில் தடவியும் சாப்பிடலாம். பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தரும் அம்மாக்கள் எளிதாகச் செய்யக் கூடிய சத்தான உணவு இது.

No comments:

Post a Comment