வல்லாரை நன்னாரி சர்பத்
வல்லாரை நன்னாரி சர்பத்
தேவையானவை:
வல்லாரைக் கீரை - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சைப்பழம் - ஒன்றில் பாதி
நன்னாரி சிரப் - 2 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
புதினா இலை - 2
இஞ்சிச்சாறு - ஒரு டீஸ்பூன்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை:
சுத்தம் செய்த வல்லாரைக் கீரையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கீரையைக் கொதிக்க விடவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு கீரையை ஆற விடவும். பிறகு வடிகட்டவும். இந்த தண்ணீருடன் நன்னாரி சிரப், தேன், இஞ்சிச்சாறு, எலுமிச்சைச்சாறு, புதினா இலை, உப்பு சேர்த்து நன்கு கலக்கி வடிகட்டிப் பருகவும்.தேர்வுக்கு அதிக நேரம் விழித்துப் படிப்பதால், உடலில் ஏற்படும் சூட்டை இது தணிக்கும். நன்னாரி சேர்ப்பதால் உடல் குளிர்ச்சியாகும். வல்லாரை ஞாபக சக்தி தரும். புத்துணர்ச்சி தரக்கூடிய பானம் இது.

No comments:
Post a Comment