முளைப்பயறு பிடிக்கொழுக்கட்டை
முளைப்பயறு பிடிக்கொழுக்கட்டை
தேவையானவை:
வேகவைத்த முளைப்பயறு - ஒரு கப்
ஓட்ஸ் பவுடர் - கால் கப்
வேகவைத்து மசித்த உருளை - ஒன்று
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முளைவிட்ட பாசிப்பயறை வேகவைத்து ஒன்றும், பாதியுமாக மசித்துக் கொள்ளவும். இதனுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு பொடித்த ஓட்ஸ், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும். பிசைந்த கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, நீளவாக்கில் உருட்டி ஆவியில் வேக விட்டு எடுக்கவும். எளிதில் ஜீரணமாகக் கூடிய எளிதாகச் செய்யக் கூடியதுமான சத்தான மாலை நேர உணவு. முளைகட்டியப் பயறு, உருளைக்கிழங்கு ஆகியவை தேர்வுக்குப் படிக்கத் தேவையான புரதம், கார்ப்போ-ஹைட்ரேட் சத்துக்களைத் தரும்.

No comments:
Post a Comment