Wednesday, 28 September 2016

சிக்கன் மான்சோ சூப்

சிக்கன் மான்சோ சூப்

சிக்கன் மான்சோ சூப்

 

தேவையானவை:

 சிக்கன் ஸ்டாக் - ஒரு லிட்டர்

 சிக்கன் துண்டுகள் (வேகவைத்து கட் செய்தது) - 100 கிராம்

 கேரட் - 50 கிராம்

 பீன்ஸ் - 25 கிராம்

 குடமிளகாய் - 50 கிராம்

 பச்சைப் பட்டாணி - 25 கிராம்

 முட்டைகோஸ் - 50 கிராம்

 செலரி - 10 கிராம்

 வெங்காயத்தாள் - 30 கிராம்

 பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1

 பூண்டு - 4 பல்

 சோயா சாஸ் - 1 டீஸ்பூன்

 சோளமாவு - 20 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 தண்ணீர் - கால் கப்

 

செய்முறை:

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் சிக்கன் ஸ்டாக்கை ஊற்றி, அதனுடன் பச்சைப் பட்டாணி, சிறியதாக நறுக்கிய கேரட், பீன்ஸ், குடமிளகாய், முட்டைகோஸ், செலரி, பச்சை மிளகாய், பூண்டு, சிறிதளவு வெங்காயத்தாள் சேர்த்து கொதிக்க வைக்கவும். காய்கறிகள் வெந்ததும், அதனுடன் சோயா சாஸ், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், வேகவைத்த சிக்கன் துண்டுகளைச் சேர்க்கவும். சோளமாவை கால் கப் தண்ணீரில் கரைத்து, அதை சூப்புடன் சேர்த்து நன்கு கலக்கி விடவும். பின்னர், சூப்பை இரண்டு நிமிடம் வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். சூப்பில், மீதமுள்ள வெங்காயத்தாள் தூவி சூடாகப் பரிமாறவும்.

 

குறிப்பு:

தேவைப்பட்டால், சூப்புடன் காளான் மற்றும் சிறிய இறால் மீனை சேர்த்துக் கொள்ளலாம்.ஒரு டீஸ்பூன் எண்ணெயில் பச்சை மிளகாய், செலரி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின்பு நறுக்கி வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து வதக்கிய பின் அதில் சிக்கன் ஸ்டாக் சேர்த்தும், மேற்கூறிய செய்முறைப்படி இந்த சூப்பை தயாரிக்கலாம்.

No comments:

Post a Comment