Wednesday, 28 September 2016

சிக்கன் ரைஸ் சூப்

சிக்கன் ரைஸ் சூப்

சிக்கன் ரைஸ் சூப்

 

தேவையானவை:

 சிக்கன் (எலும்பில்லாதது) - 250 கிராம்

 பாஸ்மதி அரிசி - 50 கிராம்

 வெங்காயம் - 50 கிராம்

 இஞ்சி - 5 கிராம்

 செலரி - 25 கிராம்

 உப்பு - தேவையான அளவு

 வெள்ளை மிளகுத்தூள் - தேவையான அளவு

 வெண்ணெய் அல்லது ஆயில் - ஒரு டீஸ்பூன்

 எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்

 தண்ணீர் - ஒரு லிட்டர்

 கொத்தமல்லித்தழை - சிறிதளவு

 

செய்முறை:

அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, தண்ணீரை ஊற்றவும். அதனுடன் நன்றாக கழுவிய சிக்கன் துண்டுகள், பாஸ்மதி அரிசி மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றைச் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை வேகவிடவும். அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, வெண்ணெய் அல்லது ஆயிலை ஊற்றி சூடானதும், அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி மற்றும் செலரியைச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும். இதனை, ஏற்கெனவே குக்கரில் வேகவைத்த கலவையுடன் சேர்த்து கொதிக்கவிடவும். பின்பு தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய கொத்துமல்லித்தழையைச் சேர்த்து, சூப்பை சூடாகப் பரிமாறவும்.

 

குறிப்பு:

இந்த சூப்பை, தண்ணீருக்குப் பதிலாக சிக்கன் ஸ்டாக் சேர்த்தும் தயாரிக்கலாம்.

No comments:

Post a Comment