கோழி மிளகு சூப்
கோழி மிளகு சூப்
தேவையானவை:
சிக்கன் (எலும்புடன்) - 400 கிராம்
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 10
தக்காளி (நறுக்கியது) - 1
பச்சைமிளகாய் (பொடியாக நறுக்கியது) - 1
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
பூண்டு (தட்டியது) - 8 பல்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
கொரகொரப்பாக பொடித்த மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - ஒரு லிட்டர்
செய்முறை:
சிக்கனை கழுவி குக்கரில் தேவையான அளவு தண்ணீர், சின்னவெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், மஞ்சள்தூள், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து எட்டு விசில் வரை வேகவிடவும். அடுப்பை அணைத்து இறக்கி, கொத்தமல்லித்தழையை சூப்பின் மீது தூவி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு:
இதை சூப்பாகவும் சாப்பிடலாம் அல்லது சாதத்துடன் சேர்த்து ரசமாகவும் பரிமாறலாம்.

No comments:
Post a Comment